டில்லி

ற்போதுள்ள பல பிரச்சினைகளுக்காக வரும் நவம்பர் 5 முதல் காங்கிரஸ் கட்சி போராட்டங்கள் நடத்த உள்ளது.

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து நாடு பல பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புகார் கூறி வருகிறது.  பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையின்மை, நிர்ணயம் செய்ய முடியாத பொருளாதார வீழ்ச்சி, முக்கியமான பொருட்களின் விலை உயர்வு, வங்கிகள் கட்டமைப்பு சீரழிவு, விவசாயிகள் துயரம் உள்ளிட்டவை மிகவும் அதிகரித்துள்ளதாகக் காங்கிரஸ் கூறி வருகிறது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 5 முதல் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.   இந்த போராட்டம் டில்லியில் அரசுக்கு எதிரான மாபெரும்  பேரணியுடன் தொடங்க உள்ளது.  வரும் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி போராட்டங்கள் நடத்த உள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட காங்கிரஸ் செயலர் கே சி வேணுகோபால், ”இந்த போராட்டங்கள் பொதுமக்களின் துயரங்களை அரசுக்கு எடுத்துரைக்கும்.   பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மாக்களுக்கு எதிரான முடிவுகள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இந்த போராட்டங்களை காங்கிரஸ் நடத்த உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.