டில்லி

ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும் என மத்திய அமைச்சர்  ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 7 ஐஐடிக்களுக்கும் இணைந்து ஒரே தேர்வாக நடத்தப்படுவதே ஜே இ இ ஆகும்.  ஆங்கிலத்தில் ஜாயிண்ட் எண்டரன்ஸ் எக்சாம் (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) என்பதே சுருக்கமாக ஜே இ இ என அழைக்கப்படுகிறது.   இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஐஐட், பனரஸ் இந்து பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு பயிற்சி நிலையம் உள்ளிட்டவைகல் சேர முடியும்.

இந்த ஜே இ இ தேர்வுகள் வரும் 2021 ஆம் ஆண்டு முதல் வருடத்துக்கு 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பின்படி ஜே இ இ முதன்மை தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 21 முதல் 26 வரை நடைபெற உள்ளது.  அதன் பிறகு, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்வுகளின் முடிவுகள் கடைசி தேர்வு முடிந்த 5 நாட்களில் வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.