சென்னை:
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவையைக் கருதி காலை முதல் இரவுவரை தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு உள்ளது.
முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்து மற்றும் மளிகைக்கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் வாகன போக்குவரத்து தடை காரணமாக பல இடங்களில் பால் உள்பட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், காலை முதல் இரவுவரை தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தனியார் பால் முகவர்கள் அறிவிப்பு விவரம்:
இதன் காரணமாக, பால் முகவர்கள் சங்கம் சார்பில், நாளை முதல், காலை 3.30 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை நடைபெறும் என்று, கூடுதல் விலைக்கு பால் விற்றால் தகவல் தெரிவிக்கலாம் என்றும் சில்லலைர விற்பனை கடைகளுக்கு சப்ளை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கு மேல் சமூகவிரோதிகள் சிலரால் விற்பனை செய்யபடுவதாக தகவல் வருவதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆவின் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. அதில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்களிலும் பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் கிடைத்திடும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் சேவையில் ஆவின் நிர்வாகம் அக்கறையுடன் செயல்படும், ஆதலால் ஆவின் பால் விநியோகம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.