திருப்பதி
வரும் மே 1 முதல் திருப்பதி தேவஸ்தானம் விஐபி தரிசன புரோட்டோகாலில் மாற்றம் செய்துள்ளது.

நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம்,
”கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்களுக்கு மட்டும் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் ஜூலை மாதம் 15-ந்தேதி வரை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தரிசன நடைமுறைைய மாற்றி உள்ளது.
மே மாதம் 1-ந்தேதி முதல் சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்கு, வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.”
என அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel