நெல்லை
ஏப்ரல் 1 முதல் 30 ஆம் தேதி வரை தென்காசி – செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து எய்யப்படுகின்றன
தெற்கு ரயில்வே
”தென்காசி – செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56719 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56738 செங்கோட்டை – நெல்லை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டைமதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை – தென்காசி இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்”
என அறிவித்துள்ளது.