மாஸ்கோ
வரும் 2024 ஆம் ஆண்டில் தனி விண்வெளி நிலையம் அமைத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும் 1998 ஆம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ரஷ்யா ஆகிய 5 உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம், புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தங்களுக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முடிவை ரஷ்யா எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு கூட்டணி நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யா விண்வெளி அமைப்புத் தலைவர் யூரி பார்சோவ் இது குறித்து
“நாங்கள் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலகட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென ஒரு விண்வெளி நிலையம் தனியாக அமைக்கப்படும்”
என அறிவித்துள்ளார்.