கொழும்பு

கஸ்ட் 14 வரை இலங்கை முன்னாள்.அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்லஒ வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தால், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பொது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.  இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக நேரிட்டது.

இலங்கையின், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார்.

பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேந்தெர்டுக்கப்பட்டார்.  சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிடம் புகலிடம் கோராமல் தங்கியிருந்தார். சிங்கப்பூர் அரசு விசா அடிப்படையிலே தங்குவதற்கு ராஜபக்சேவுக்கு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

விரைவில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அமைச்சரகம் தெரிவித்தது.இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை மேலும் 14 நாட்களுக்குச் சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது.  எனவே அவர் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன,