புதுடெல்லி 

ன்றுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. 

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியப் பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தி உள்ள மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம் பி  ஆனார். நரசிம்மராவ் அரசில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.

தற்போது 91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார். காலியாக இருக்கும் அந்த இடத்தை நிரப்புவதற்காகச் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல்முறையாக மேல்சபைக்குத் தேர்வு பெற்றார்.

கல்வி ஆஇச்சர் தர்மேந்திரபிரதான், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட 7 மத்திய அமைச்சர்களின் பதவி காலமும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

வர உள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் வைஷ்ணவை தவிர மற்ற அனைவரும் போட்டியிடுகிறார்கள். ஆக்வே அவர்களின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். தவிர 49 எம்.பி.க்கள் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது ஓய்வு பெற்றனர். இன்று 5 பேர் ஓய்வு பெறுகின்றனர்.