பெங்களூரு:

வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில், ஓட்டு போடுவர்களுக்கு இலவச டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு பெங்களுருவில் உள்ள ஓட்டல் நிர்வாகம் புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுஉள்ளது.

அதன்படி,  இன்று நடைபெறும் தேர்தலில் முதன்முறை வாக்களிப்பவர்கள், தாங்கள் வாக்களித்ததை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் விரலில் உள்ள மையை காட்டினார், அவர்கள் ,மசால் தோசையுடன், காபி இலவசமாக வழங்கப்படு தெரிவித்துள்ளது.

இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவதோடு சரி… வாக்களிக்க வருவது கிடையாது. அவர்களை வாக்களிக்க வர வைக்கும் முயற்சியாகவும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த இலவச டிபன் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும்,  தான் எந்த கட்சியையையும் சார்ந்தவன் இல்லை என்றும் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்குவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தனியார் பள்ளிகள் சார்பில், வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு 4 சிறப்பு மதிப்பெண்கள் தரப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.