சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு இன்றுமுதல் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிர் பயணிக்க கட்டணமில்லா வழிவகை செய்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்தார.
அதனபடி, தமிழகம் முழுவதும் மே மாதம் 8ந்தேதி இந்த திட்டம் நடைமுறை அமலுக்கு வந்தது, அதைத்தொடர்ந்து பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்தவொரு டிக்கெட்டும் வழங்கப்படாத நிலையில், இன்றுமுதல் பெண்களுக்கு இலவச டிக்கெட் (கட்டணமில்லா பயணச்சீட்டு) வழங்கப்பட்டு வருகிறது.