சென்னை:
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பயன்படும் மாஸ்க் நியாயவிலைக் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். முதல்கட்டகமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் முகக் கவசங்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட, மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முகக் கவசங்கள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
அதில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் வருகின்றனர்.
குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக் கவசங்கள் என்று கணக்கிட்டால், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்படவேண்டும்.
முதற்கட்ட மாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.