சென்னை: மாற்று திறநாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு, நடைமுறையிலுள்ள நில ஒப்படை முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்த்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக வீட்டுமனைப் பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் விவரத்தினை அரசுக்கு உடன் அனுப்பி வைக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என எழுதி உள்ளார்.