சென்னை: சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க விரும்புபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது.
சென்னையின் முக்கிய பகுதியில் இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது. இதன் காரணமாக கடற்கரை சாலை, அண்ணா சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதுடன், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த போட்டியை காண டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், டிக்கெட்டணம் அதிகம் என்பதால் போதிய வரவேற்பு இல்லை. இதனால், இந்த போட்டியை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு விளையாட்டுத் துறைஅறிவித்து உள்ளது.
இந்த நிலையில், இரவு நேர ஃபார்மலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை காண செல்வோர் மெட்ரோவில் இலவசமாக செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழ்நாடு விளையாட்ட மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றுமு் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31 இன்று) மற்றும் செப்டம்பர் 1 (நாளை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட்டுடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ அல்லது பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
Paytm Insider’ மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும்.
இந்த மெட்ரோ பாஸை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். Paytm Insider மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்த சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகள், இளையஞர் சமுதாயத்தினர், பொதுத்தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மற்றும் நீட் போன்ற தேசிய தேர்வுகளை எழுத பேருந்து, ரயில், ஆட்டோ என பணம் செலவழித்து அடித்துபிடித்து செல்லும் நிலையில், அவர்கள் இலவசமாக பயணம் செய்ய ஆதரவு தராத மெட்ரோ ரயில் நிறுவனம், ஆடம்பர விளையாட்டான கார் ரேஸ் பார்க்க செல்பவர்களுக்கு ஆதரவாக இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.