ஈரோடு:  ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களிடையே பல்வேறு சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது, விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், நெசவாளர்களுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபறக்கிறது. திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது கூட்டணி கட்சியான திமுகவில் 11 அமைச்சர்கள் தலைமையில் வாக்குவேட்டையாடி வருகின்றனர்.  மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினரும் அங்கு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,.  கடந்த 2021ல் திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் அளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்றவர்,.  விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளவானது 750 யூனிட்டில் இருந்து தற்போது 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. , கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணமான ரூ.1.40 பைசாவில் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக, விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றவர், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு இதற்கான அரசாணை வெளியிடப்படும் என கூறினார்.