: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட ஏற்கனவே 11 அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் குழுவை அமைத்துள்ள திமுக தலைமை, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி. கனிமொழியையும் சேர்த்து, 40 நட்சத்திர பேச்சாளர்கள் கொண்ட பட்டியலை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு இவிகேஎஸ் இளங்கோவன் உள்பட 6 பேர் களத்தில் உள்ளனர். இதனால், 6முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள திமுக, அதற்கான அரசு நிர்வாகத்தையே முடுக்கி விட்டுள்ளது.  இந்த  நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து அமைச்சர்களும், எம்.பி.க்களும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்து திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு பேசிய வீடியோ வைரலான நிலையிலும், திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருவதாலும் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில், அரசின் முழு செயல்பாடும் ஈரோட்டை நோக்கியே உள்ளது.  திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்,டிஆர் பாலு, ஐ பெரியசாமி, கேஎன் நேரு, கனிமொழி, உதயநிதிஸ்டாலின் உள்ளிட்ட 40 பெயர்களை கொண்ட பட்டியலை கொடுத்துள்ளது. அதிமுகவின் இரண்டு பிரிவுகளில் இருந்தும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அணி சார்பாக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற் உறுப்பினர்கள் பெயர்களை கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் சார்பாக தங்களது அணியின் முக்கிய நிர்வாகிகள் பெயர்களை கொடுத்துள்ளனர்.