சென்னை
தமிழகத்தில் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த திட்டம் இன்றே அமலுக்கு வந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது. இன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் பதவி ஏற்றனர்.
இன்று மு க ஸ்டாலின் தனது முதல் திட்டங்களாக அறிவித்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமும் ஒன்றாகும். அதன்படி தமிழக அரசின் அனைத்து சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.
இந்த திட்டம் இன்றே அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் மிகவும் மகிழ்ச்சியுடன் இன்று முதல் தங்கள் இலவச பேருந்து பயணத்தைத் தொடங்கி உள்ளனர்.