புதுச்சேரி:  தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பட் ஜெட் கடந்த 13ந்தேதி  சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி மாநிலத்தில், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  இலவச லேப்டேப், காலை சிற்றுண்டி,  சிபிஎஸ்இ பாடத்திட்டம்,  சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு பிங்க் கலர் பேருந்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அத்துடன், பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தற்போத பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தின்போது, அனைத்து கட்சி உறுப்பினர்களும், அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு  இலவச பயணம் வழங்க வேண்டும் என வற்புறுத்தினர்.

இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறி முதலமைச்சர் ரங்கசாமி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்  அறிவித்தார்.

மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.