சென்னை:
குரூப்-1 தேர்வு முடிவு வெளியான நிலையில், நேர்முகத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்த, தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு நடத்தப்பட் குரூப்-1 தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குரூப் 1க்கான நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தேர்வாணையத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பாக வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், நேர்முகத் தேர்வில் வல்லுநர் குழுவினால் கலந்தா லோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கும் முறை உள்ளது என்றும், அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது எனவும் டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
எனவே இதுகுறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது