சென்னை,

ன்னிய செலாவணி மோசடி தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையைஎடுத்துள்ளது.

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் அன்பழகன் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.

போலியாக 8 நிறுவனங்கள் நடத்தி அதன் முலம் 79 கோடி ரூபாய் வெளிநாடுகளில் பரிவர்த்தனை செய்தாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில்,   கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் லியாகாத் அலிகான்  என்பவர் அளித்த புகாரின் பேரில் அன்பழகனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அன்பழகன்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கோ.சி.மணியின் மகன் ஆவார். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி.மணி தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவர் மறைந்த கோ.சி.மணி என்பது குறிப்பிடத்தக்கது.