பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் துயருறுகிறார்கள்.  வெளளத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
4
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில்  கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 10 பேரும் பிரான்ஸில் 2 உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்து நிற்கிறார்கள்.
ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துள்ளதாக  பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் கூறியுள்ளார். இவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.
பாரீஸில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆற்றின் கரையில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.  இதனால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  2
மத்திய பிரான்ஸ் பகுதியில் உள்ள சோப்பீஸ் சர்லோயிங் நகரிலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை காப்பாற்றக் கோரி தொலைபேசியில் உதவி கோரி இருக்கிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரான்ஸில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறது.
பிரான்சில் லூய்ரெட், செய்-எட்-மார்ன், நீமர்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இம்மழையினால் செயின் நதியின் உயரம் சராசரி உயரமான, 6 மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1
தென் ஜெர்மனியும் மழை வெள்ளத்தால் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. மழை காரணமாக ஜெர்மனியில் இதுவரை அங்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை. பவேரியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. ஆகவே  அப்பகுதி மக்கள் தரைத்தளங்களை விட்டு வெளியேறி மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
4
இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பவேரியா மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஆஸ்திரியா நாட்டில் சால்ஸ்பர்க் பிராந்தியத்திலும்  கடும் மழை பெய்து வருகிறது. பிரான்ஸ் முதல் உக்ரைன் வரை உள்ள மத்திய ஐரோப்பாவில்,
இந்த வார இறுதியில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.