சீனா மற்றும் தைவானைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த வல்லம்-வடகால் பகுதியில் 706.5 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி திறந்துவைப்பதற்காக நேற்று சென்னை வந்தார் யங் லியு.
இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது பெற்ற யங் லியு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிற்பேட்டையில் இதுபோன்ற பிரம்மாண்ட தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு அதற்காக பாராட்டையும் தெரிவித்தார்.
பாக்ஸ்கான் நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பு தவிர எலக்ட்ரிக் வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான AI பயன்பாட்டு எந்திரங்கள் ஆகியவற்றை அடுத்த சில ஆண்டுகளில் தயாரிக்க உள்ளது.
சென்னை தவிர தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்நகரத்தை உருவாக் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் பாக்ஸ்கான் நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக அதன் தலைவர் யங் லியு கூறியிருப்பது தமிழக இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.