தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் புதிய மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் வசதியை துவங்க உள்ளது.
ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (பாக்ஸ்கான்) நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையிலான ரூ. 1600 கோடி புதிய முதலீடுக்கான இந்த ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் தமிழகத்தில் விரிவாக்கத் திட்டங்கள், உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதற்கு சான்றாகும். இது மாநிலத்தின் மிகப்பெரிய சாதனையாகும்” என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய ஒப்பந்தம் மூலம் சுமார் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.