தைவான் நாட்டைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான், வட இந்தியாவில் தனது முதல் வசதியை அமைப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலை பெங்களூரில் அமையவிருக்கும் தொழிற்சாலையை விட பெரியது என்றும் இது உலகளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதற்காக யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (YEIDA) பேச்சுவார்த்தை நடத்தி வருவாதாகக் கூறப்படுகிறது.
கிரேட்டர் நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் ஒரு முக்கிய இடத்தில் அதற்கான இடம் அடையலாம் காணப்பட்டுள்ளது, மேலும் ஜேவாரில் வரவிருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் பங்கு, மின்னணு ஏற்றுமதிக்கான ஒரு கவர்ச்சிகரமான மையமாக இதை மாற்றியுள்ளது.
Foxcon நிறுவனம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 25 முதல் 30 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது – இது கடந்த ஆண்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகம்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு, நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சி கட்டம் ஸ்மார்ட்போன்களுக்கு அப்பாற்பட்ட துறைகளில் கவனம் செலுத்தும், இதில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் சுகாதாரம் ஆகியவை அடங்கும் என்றார்.
“நிச்சயமாக, இந்தியாவில் எங்களால் முடிந்தவரை மதிப்புச் சங்கிலியை மேம்படுத்த விரும்புகிறோம்,” என்று லியு அப்போது கூறினார்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் ஏற்கனவே தொழிற்சாலைகளை அமைத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆந்திராவின் ஸ்ரீசிட்டி ஆலையில் தனது செயல்பாடுகளைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.