சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தார். மின்சாதனங்கள் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெரிய முன்னேற்றம் அடையும். செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் மேம்பட்ட செயல்பாடுகளை ஃபாக்ஸ்கான் தொடங்கவுள்ளது.
அமைச்சர் ராஜாவின் பதிவில்,
✨எப்போதும் இல்லாத மிகப்பெரிய #பொறியியல் #வேலைக்கான தமிழ்நாட்டிற்கான அர்ப்பணிப்பு !
#Foxconn ரூ. 15000 கோடி முதலீடுகள் மற்றும் 14,000 உயர் மதிப்பு வேலைகள்! பொறியாளர்கள் தயாராகுங்கள்! @Guidance_TN இந்தியாவில் முதல் முறையாக #FoxconnDesk ஐக் கொண்டிருக்கும்! இது தமிழக மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைக்கு மற்றொரு பெரிய ஊக்குவிப்பு
‘
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் மீதான தங்கள் ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி திரு. ராபர்ட் வூவைச் சந்தித்தனர். மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பு மற்றும் AI தலைமையிலான மேம்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகளின் அடுத்த கட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும்.
இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஃபாக்ஸ்கான் மேசை தடையற்ற வசதி மற்றும் பணி-முறை செயல்படுத்தலை உறுதி செய்யும்b!
#DravidianModel 2.0 க்கு நாங்கள் மேடை அமைத்து வருகிறோம்!!
இவ்வாறு கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில், ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சிப்காட் (SIPCOT) சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஆப்பிள் ஐபோன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.