டில்லி

காங்கிரஸ் கட்சி ஒரு மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி அன்று சமஸ்திபூர் மக்களவை தொகுதி மற்றும் குஜராத் பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இந்த தேர்தலின் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.    இந்த தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சமஸ்திபூர் மக்களவை தொகுதி வேடாளராக அசோக் குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.  அத்துடன் பீகார் மாநில கிஷன்கஞ்ச் தொகுதியில் சயீதா பானு, ராஜஸ்தான் மாநில மண்டாவா தொகுதியில் ரீட்டா சவுத்ரி, கின்வசார் தொகுதியில் ஹரேந்திர மிர்தா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பாலா தொகுதியில் மன்னு தேவி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவையில் நான்கு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளன.   இதில் தராட் தொகுதியில் குலாப்சிங் பிராபாய் ராஜ்புத், பாயத் தொகுதியில் ஜசுபாய் ஷிவாபாய் படேல், அம்ரைவாடி தொகுதியில் தர்மேந்திரபாய் சாந்திலால் படேல் மற்றும் லூனாவாலாவில் குலாப்சிங் சோம்சிங் சவுகான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.