போபால்: மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பிரபல மருத்துவமனையான கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் ஐ.சி.யூ. வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த வார்டில் 40 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டவு டன் மருத்துவமனை ஊழியர்களை குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். உடடினயாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும், குழந்தைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதில் 36 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். துரதிருஷ்டவசமாக 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்து விட்டன என மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாராங் தெரிவித்துள்ளார்.
மின்சார கசிவு காரணமாக மருத்துவமனையின் 3-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.