ஆஸ்திரேலியாவில், நான்கு நாடுகள் இடையே ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய ஹாக்கி அணி தனது, 2-ஆவது ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றுள்ளது.
இப்போட்டியில், இந்திய அணி 23 மூன்றாவது நிமிடம் வரை சமாளித்த மலேசிய வீரர்களால் அதன்பிறகு, கட்டுப்படுத்த முடியவில்லை. 24-ஆவது நிமிடத்தில் நிகின் திம்மையா முதல் கோல் அடித்தார். இதன் பின்பு 39-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மலேசியா கோல் அடித்தது. அதற்கு அடுத்த நிமிடமே இந்தியாவும் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடித்தது. மீண்டும் மலேசியா 47-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து சமன் செய்தது.
55-வது நிமிடத்தில் நிகின் திம்மையாவும், 56-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங்கும் இந்தியாவுக்காக கோல் அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. சனிக்கிழமை இந்தியா – நியூஸிலாந்து ஹாக்கி போட்டி நடைபெறுகின்றது.