க்லாந்து

ர்வதேச நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் வரும் டிசம்பர் முதல் துவங்கும் என கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் டேவ் ரிச்சர்ட்சன் நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் பரிசோதனை முறையில் நடத்தப்படுவதாகவும், அவை சாம்பியன்ஷிப் போட்டிகளாக கருதப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :

“சவுத் ஆஃப்ரிக்காவும் ஜிம்பாப்வேயும் வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கின்றன.  இந்த போட்டிகள் தற்போது பரிசோதனை முறையில் நடத்தப்பட உள்ளன. ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற புதியதாக டெஸ்ட் மேட்சுகளுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இந்த போட்டிகள் ஒரு பயிற்சியாக அமையும்.  இந்த போட்டிகள் டே-நைட் மேட்சாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த போட்டிகளில் ஏற்கனவே கிரிக்கெட்டில் பலம் பொருந்தியதாக உள்ள 9 நாடுகள் அணிகளுடன் புதிய அணிகள் மோதும்.  இது அந்த அணிகளுக்கு அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும்” என தெரிவித்துள்ளர்.