சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகள் 2021ல் அறிமுகம்…

க்லாந்து

ர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் 2021ல் அறிமுகம் செய்யப்படும் என கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் டேவ் ரிச்சர்ட்சன் 2019 ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகள் அமைக்கப்படும் எனவும் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அதாவது 2021 ல் தேர்ச்சி பெற்ற 13 அணிகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்ச்சியானது அந்த அணிகளின் 2 வருட விளையாட்டை பொறுத்து அமையும் எனவும், இதற்கான தகுதிப் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து அறிவிக்கும் எனவும்,  இதில் கிடைக்கும் மதிப்பெண்களை பொறுத்தே எந்த நாடு போட்டியை நடத்தும் என்பதும் முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படும் என கூறினார்
English Summary
ODI Teams will be introduced by 2021