தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று உற்சாகமாக துவங்கியது.
இதற்காக தீவுத்திடலைச் சுற்றியுள்ள கொடிமரச் சாலை, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, மற்றும் காமராஜர் சாலையில் 3.5 கி.மீ. சுற்றளவு கொண்ட சர்கீயூட் அமைக்கப்பட்டுள்ளது.
19 வளைவுகளைக் கொண்ட இந்த சர்கியூட்டை ஆய்வு செய்த FIA, F4 போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது.
இதனையடுத்து F4 போட்டிகளுக்கான பயிற்சி சுற்று இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.