டெல்லி: தலைநகர் டெல்லி என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் வரும் 25ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். . அவருடன் அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]