கொழும்பு: இலங்கை அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரா (வயது 65)  கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மங்கள சமரவீரா. தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதும், அதன் பிறகு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இலங்கையில் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் மங்கள சமரவீர வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2005- 2007ஆம் ஆண்டு காலத்திலும் 2015ஆம் ஆண்டிலும் மங்கள சமரவீர வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.  3 முறையாக வெளியுறவுத் துறை அமைச்சரான பெருமைக்குரியவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் கொழும்புவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தறபோது 65 வயதாகும்மங்கள சமரவீரா தீவிர பவுத்த மதத்தைச் சார்ந்தவர்,  இதுவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.