சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போது மாநில மதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர்சிங். இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மாநிலம் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சித்து அறிவிக்கப்பட்டார்.

இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர்சிங், பாஜகவில் இணைவார் என கருதப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், தேர்தலில் பெருந்தோல்வி அடைந்ததுடன், காங்கிரஸ் கட்சியும் தோல்வி அடைந்தது. முதன்முறையாக பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அமரீந்தர்சிங், தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமரீந்தர் சிங்  வரும் 19-ஆம் தேதி தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்துவிட்டு, தானும் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளார்.