
வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா புது வீட்டில் குடியேறி உள்ளார்.
புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 20ந்தேதி அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஒபாமா விலகினார். அதை தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.
தற்போது வாஷிங்டன் அருகேயுள்ள கலோரமா என்ற இடத்தில் புதிய வீட்டில் குடியேறியுள்ளது ஒபாமா குடும்பம்.
இந்த ஆடம்பர பங்களாவில், 9 படுக்கை அறைகள், 8 பாத்ரூம்கள், டைனிங் ரூம், விருந்தினர் தங்கும் அறை என சகல வசதிகளும் உடையது. இது சுமார் 8200 சதுரஅடி பரப்பரளவு கொண்டது.
இந்த வீட்டை ஒபாமா ‘லீசு’க்கு எடுத்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel