சீனா-பாகிஸ்தான் பொருளாதார சந்தையில் பெய்ஜிங் $ 57 பில்லியன் முதலீடு
பாகிஸ்தான் அரபிக் கடல் துறைமுகமான க்வடாரையும் சீனாவின் மேற்கு பகுதியையும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார சந்தையில் (சி.பி.இ.சி., CPEC) சி.பி.இ.சி. இணைக்கும் என்று எதிர்பார்க்கப் படுன்றது.
சி.பி.இ.சி. யினால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு சீன நிறுவனங்கள் பாகிஸ்தானில் வியாபாரம் துவங்க நிலம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பெய்ஜிங், தென் ஆசிய நாடு முழுவதும் ஒரு புதிய வர்த்தக பலப்படுத்த 57 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சீன – பாகிஸ்தான் உறவை விரிவுப்படுத்தும் விதமாகப் பல்வேறு சீன நிறுவனங்கள் சமீப மாதங்களில் பாகிஸ்தானில் வியாபாரம் செய்ய இடங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன” என்று ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்திய பல்வேறு பாகிஸ்தான் அதிகாரிகள், சீன கம்பெனிகள் பாகிஸ்தானின் 270 பில்லியன் டாலர் மதிப்புள்ள, சிமென்ட், இரும்பு, மின்சக்தி துறை மற்றும் ஜவுளி ஆகியத் துறைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சீன உள்நாட்டில் வளர்ச்சி குறைந்து வருவதை அடுத்து, பெய்ஜிங்கின் ஒரு உலக வணிக நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளில் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய சீன நிறுவனங்கள் விரும்புகின்றனர். பாகிஸ்தான் இந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது..
சீன நிறுவனம் ஒன்று சமீபத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் ஒரு மூலோபாய பங்குகளை வாங்கியுள்ளது. ஷங்காய் எலக்ட்ரிக் பவர் நிறுவனம், 1.8 பில்லியன் டாலர் கொடுத்து பாகிஸ்தானின் மிகப்பெரிய மின்சக்தி தயாரிக்கும், கே-எலக்ட்ரிக் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
யூனுஸ் பிரதர்ஸ் குரூப் (சிமெண்ட் முதல் ரசாயனங்கள் வரை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள்) தலைமை நிர்வாகி முகமது அலி டப்பா, சீனாவில் உள்ள நிறுவனங்களிடம் அதிகளவில் நிதி உள்ளது. அதனை பாகிஸ்தானில் பெரிய அளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்” என்றார்.

இதனை பாகிஸ்தானில் உள்ள பலரும் வரவேற்றுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடு 2007-2008 ல் 5.4 பில்லியன் டாலராக ஆக இருந்து வருகின்றது. ஆனால், 2015-2016 இல் 1.9 பில்லியன் டாலராக இருந்தது. இது மிகவும் குறைவு.
பங்குச் சந்தை கையெழுத்திடும் விழாவில் பேசிய சீனாவின் பாகிஸ்தான் தூதர், சன் வைடோங்க், இந்த ஒப்பந்தம் சீனா மற்றும் பாகிஸ்தான் சந்தைகளிடையே தற்போதைய நிதி ஒருங்கிணைப்பினை பிரதிபலிக்கின்றது. இது எங்கள் நிறுவனங்களுக்கு அதிக நிதி ஆதரவு கிடைக்க வழிவகைசெய்யும்” எனக் கூறினார்.

சீன அரசுக்கு சொந்தமான தொழில்துறை நிறுவனங்களின் உதவியுடன் எவ்வாறு பாகிஸ்தானின் தொழில் உற்பத்தியை அதிகரிப்பது என இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் விவாதித்து வருவதை அடுத்து சீன கம்பெனிகள் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானிய அதிகாரிகள், வரிச்சலுகைகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது குறித்தான திட்டங்களை வரைந்து கொண்டிருக்கின்றனர்.
எனினும் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னரே சீன முதலீட்டாளர்கள் நில பேரங்களை துவக்கிவிட்டனர் என்பது அவர்களது ஆர்வத்தை பறைசாற்றுகின்றது.
பாகிஸ்தானில் தொழில் செய்ய
மற்ற நாட்டு முதலாளிகளும் முன்வரவேண்டுமெனக் கோரிக்கை வலுத்துள்ளது. யூனுஸ் பிரதர்ஸ் நிறுவன அதிகாரி டப்பா, மேற்கத்திய முதலீட்டாளர்கள் தங்களின் பாகிஸ்தான் மீதான “வெறுப்பை” கைவிட்டு, இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
“அவர்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்தால், அவர்கள் வேகமான மற்றும் அபரிமிதமான வளர்ச்சியைக் காணலாம் ” என்றார்.

இந்தியாவின் பிரதமர், நாடு நாடாகச் சென்று முதலீடுகளை ஈர்க்க முயன்றும், அவரது “மேக் இன் இந்தியா” திட்டம், வெளிநாட்டு முதலாளிகளை ஈர்க்கத் தவறிய வேளையில், தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வரும், பாகிஸ்தான் வெகு எளிதில், சீன முதலாளிகளை ஈர்த்துள்ளது, மோடியை விடப் பாகிஸ்தான் பிரதமரின் நிர்வாகத் திறமை சிறந்தது என்பதை பிரதிபலிக்கின்றது.