சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர் வெங்கடாசலம். இவர்மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தன. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர் சத்தனக்கட்டை பதுக்கி வைத்திருந்தாக புகார் கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் 23ந்தேதி லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவரது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பல ஆவணங்கள், 11 கிலோ தங்கமும், சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான வெங்கடோசலம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் தரப்பினரின் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளும், தற்போது அரசின் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும, அரசின் டார்ச்சர் காரணமாகவே வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளால், அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த தற்கொலை சம்பவத்தை வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர. அவரது செல்போனையும் ஆராய்ந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது, வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சத்தனக்கட்டை பதுக்கல்: முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு!