புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருந்து போது, அம்மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் காலமானதையடுத்து, அந்த இடத்துக்கு தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்முறை ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி பலத்துடன் உள்ளது.

ராஜஸ்தானிலிருந்து மன்மோகன் சிங்கை ராஜ்ய சபைக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

ராஜ்யசபை தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், முறைப்படி மன்மோகன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவலை ராஜஸ்தான் அமைச்சர் ஒருவரும் உறுதி செய்தார்.

கடந்த திங்களன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது குறித்து முதல்வர் அசோக் கெலாவட் விவாதித்ததாக தெரிகிறது.