Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாகிறார் தேவகவுடா… இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்…

Jun 9, 2020

பெங்களூரு:

மாநிலங்களவை எம்.பிக்கான தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் பிரதமர் தேவகவுடா  இன்று மனுதாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் காலியாக 24 மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் வரும்  19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலின்போது,  கர்நாடக மாநிலத்தில் இருந்து காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கும், 2 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை எம்.பியாக களத்தில் இறங்கி உள்ளார்.
ஜேடிஎஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் வாக்கு உள்ள நிலையில், மேலும் தேவைப்படும் 44 எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது.
இதையடுத்து, இன்று தேவகவுடா முறைப்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Post navigation

வெளிநாட்டில் கணவர் இறந்த மறுநாள் குழந்தை பெற்றெடுத்த பெண்..! கேரளாவில் சோகம்
சீனா லடாக் எல்லையை ஆக்கிரமித்துள்ளதா? : ராஜ்நாத் சிங்கை கேட்கும் ராகுல் காந்தி

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer