இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்த நிலையில், இன்று கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சி நடத்திய பேரணியில் பங்கேற்ற அதன் தலைவர் இம்ரான்கான்,  காவல்துறை அதிகாரிகளையும் நீதித்துறையையும் “பயங்கரமான” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில்,, நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காக இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கானுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,   முன்னாள் பிரதமர் இம்ரான்கானை இஸ்லாமாபாத் காவல்துறை இன்று கைது செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றங்களின் உத்தரவுகளைத் தொடர்ந்து,இம்ரான்கான் வசித்த வரும்,   ஜமான் பூங்காவிற்குச் சென்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்று கைது செய்யும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.