சென்னை: முன்னாள் திமுக எம்.பி. மஸ்தான் ஓடும் காரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே அவரது உறவினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக அவரது சகோதரர் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த டிசம்பர் மாதம் 22ந்தேதி வாகனத்தில் சென்றபோது, திடீர் மாரடைப்பு காரணமாக காலமானாதாக கூறப்பட்டது. சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளும் நடைபெற்ற-
ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரில், விசாரணைமேற்கொண்ட காவல்துறையினர் மஸ்தான், உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என்று தெரியவந்தது. இதுதொடர்பாக அவருடன் காரில் பயணம் செய்த அவரது உறவினர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதால், மஸ்தான் ஓடும் காரில், முகத்தை மூடி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான்தான் மஸ்தானை கொலை செய்ய தீட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமானது. மஸ்தானை கொலை செய்ய, இம்ரான் ரூ.15 லட்சம் பேரம் பேசியதாகவும், தொழில்போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மஸ்தான் கொலை வழக்கில், அவரது சகோதரர் இம்ரான்பாஷாவுக்கு தொடர்பு உள்ளதாக, காவல்துறையினர் கைது செய்தனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக மஸ்தான் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.