டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது, ஆனால் விசாரணை தொடரலாம் என்று கூறி உள்ளது.
மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான முன்னாள் அமைச்ச்ர ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரணைக்கு சென்றுள்ளது.
இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து, விசாரணையை தொடர உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, இவ்வழக்கில், 3-வது நீதிபதியின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் எந்தவொரு உத்தரவும் வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தது. மேலும், ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.