சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த  புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக  6 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு ஜெயக்குமாரை கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார்  மார்ச் 11 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜாமின் வழங்கக்கோரி ஜெயக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே திமுக நபர் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ள நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதைடுத்து, நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி அசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நிலமோசடி வழக்கில் ஜெய்குமாருக்கு ஜாமின் வழங்க புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஜெயக்குமார் மனுவுக்கு பதில் தர காவல்துறை அவகாசம் கோரியதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.  இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.