மலேசியா : முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

                                             மனைவியுடன் நஜிப் ரசாக்

கோலாலம்பூர்

லேசிய நாட்டில் முன்னாள் தலைமை காவல் அதிகாரி உட்பட பல முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் வெற்றி பெற்ற மகாதிர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.  அப்போது அவர் முந்தைய அரசின் குற்றங்களை விசாரிக்க புதிய ஊழல் தடுப்பு மையம் அமைக்கப்படும் எனவும்,  அந்த விசாரனையில் பலரது ஊழல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.    முந்தைய அரசு குறித்த எந்த ஒரு ஆவணமும் யாருக்கும் அளிக்கப்படக் கூடாது எனவும் எதையும் அழிக்கக் கூடாது எனவும் அமைச்சர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் அரசு அதிகாரிகள் பலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மலேசிய அரசின் முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி காலித் அபு பக்கர், அரசு தலைமை வழக்கறிஞர் முகமது அபாந்தி அலி, முன்னாள் கருவூல அதிகார்  முகமது இர்வான் செரிகர் அப்துல்லா உள்ளிட்டோருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் காலித் அபு பக்கரிடம் இது குறித்து அவருடைய வாட்ஸ்அப்  இல் கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.  அதற்கு அவர் தமக்கு எதுவும் தெரியாது என விடை அளித்துள்ளார்.   மற்றவர்கள் யாரும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை அன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவர் மனைவிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது

Tags: Former malaysian govt officials barred from foreign travel