குர்கான்:
ந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகிட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
 

ஹாக்கி வீரர் முகமதுஷாகித்
ஹாக்கி வீரர் முகமதுஷாகித்

56 வயதான முகமது ஷாகிட் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஆவார். நட்சத்திர வீரரான இவர் 1980ல் நடைபெற்ற  மாஸ்கோ   ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக சென்ற குழுவில் விளையாடியவர்.   ஸ்பெயினுடன் நடந்த போட்டியில் முகமது ஷாகித் போட்ட நான்காவது கோலால்தான் இந்தியா தங்கப் பதக்கத்தை பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துபவ பரிசோதனையின்போது அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குர்கானில் உள்ள மெதந்தா மெடிசிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஷாகித்துக்கு அதிகமான வயிற்றுவலி ஏற்பட்டது. அதனால் அவர் வாரணாசியில் உள்ள சர் சுந்தர்லால் (SSL) மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  ஏற்கனவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த முகமது ஷாகிட் இன்று காலை சிகிச்சை பலனலிக்காமல் மரணத்தை தழுவினார்.