டில்லி:

ந்திய பெண்கள் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலிராஜ், 20ஓவர் கிரிகெட் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2006ம் முதன்முறையாக, டி20 போட்டிகளில் ஆடத் தொடங்கிய போது அணியை வழிநடத்தியவர் மித்தாலி ராஜ். அப்போது, கேப்டனாக இருந்து பல்வேறு வெற்றிகளை குவித்தவர் மித்தாலி ராஜ்.

தற்போது  36 வயதாகும் மித்தாலி ராஜ், 32 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார், அதுபோல மூன்றுமுறை  20 ஓவர் உலகக்கோப்பைத் தொடர்களிலும் கேப்டனாக இருந்துள்ளார்.

இதுவரை 89 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 ஆயிரத்து 364 ரன்கள் எடுத்துள்ளார். 2000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மித்தாலி ராஜ் படைத்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் இன்று அறிவித்துள்ளார். தனது நோக்கம், 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் வெற்றிவாகை சூட வேண்டும் என்பதும்,  தாய் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளவவர், தனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் பிசிசிஐக்கு நன்றி  தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.