டில்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 88. இவர் வாஜ்பாய் அமைச்சரவையின் போது ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடலக்குறைவு காரணமாக மரணம் எய்தினார். இவர் கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர்.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர். பின்னர் பீகாரின் முசாபர்பூல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார். தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் பத்திரிகை துறையிலும் பணியாற்றியவர்.
கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை அடக்கம் செய்ய அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டி வாங்கப்பட்டது. இதில் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக வும், அதில் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.