வேலூர்:
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் தடுப்பணையின் 12 உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
வேலூர் வாணியம்பாடி அருகே உள்ள தடுப்பணையை கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தி கட்டி முடித்த நிலையில் தற்போது அந்த அணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

பாலாறு மஞ்சக்குப்பம்அருகே உள்ள பள்ளத்ததூரை சேர்ந்த விவசாயி சீனு என்ற சீனிவாசன். தடுப்பணையில் தண்ணீர் நிறைந்திருப்பதை கண்டு அதில் குதித்து நீந்தி குளிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.
அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஆந்திர காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆந்திர போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சீனுவின் உடலை தேடி வந்தனர்.
இன்று காலை ஆந்திர தடுப்பணையில் இருந்து சீனுவின் உடல் மீட்கப்பட்டது. சீனுவின் உடலை அருகே உள்ள குப்பம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனு பாலாற்றில் விழுந்து இறந்ததுபற்றி தமிழக போலீசார் விசாரித்தில், பாலாற்றில் உள்ள தடுப்பணையை வேடிக்கை பார்த்தபோதுதான் விவசாயி சீனிவாசன் தவறி விழுந்து உயிரிழந்தார் என தெரிய வந்ததாக கூறினர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, இறந்த சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel