திருச்சி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லால்குடி லோகாம்பாள் காலமானார். அவருக்கு வயது 68.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் திருச்சியில் காலமானார். இவர் லால்குடி தொகுதியில் இருந்து 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991 முதல் 96 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

லோகாம்பாள் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]