பெங்களூரு,

காங்., கட்சியில் இருந்து கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணா திடீரென விலகினார். இது கர்நாடக காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக  காங்கிரஸ் கட்சியில் 1992-94 வரையில் துணை முதல்வராகவும், தொடர்ந்து 1999-2004 மற்றும் 2004-2008 வரையில் மாநில முதல்வராகவும் பதவி வகித்தவர். பின்னர் வெளியுறவுத்துறை செயலாளராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக காங்கிரசில் அவர் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதார்.

இதுகுறித்து, தாம் கட்சியில் இருந்து விலகுவதாகவும்,  காரிய கமிட்டியில் இருந்தும் விலகுவதாகம் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி இருப்பது கட்சியினரடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.