இந்திய-நேபாள தேர்தல் ஆணையர்கள் காதல் திருமணம்?

Must read

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் குரேஷியும் நேபாளத்தின் இந்நாள் தேர்தல் ஆணையர் இலா ஷர்மாவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ec

குரேஷிக்கு வயது 69, ஷர்மா 49 வயதானவர் இருவரும் கடந்த ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற “பணமும் அரசியலும்” என்ற மாநாட்டில் கலந்துகொள்ள சென்றபோது சந்தித்துள்ளனர். அதன்பிறகு குரேஷி எங்களுக்குள் ஒரு மனதளவில் இணைப்பு ஏற்ப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் இவர்கள் திருமணம் இருமுறை திட்டமிடப்பட்டு தாமதமானதாக தெரிகிறது.
குரேஷி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், ஷர்மா 15 ஆண்டுகளுக்கு முன்பாக மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் கணவரை இழந்தவர் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. ஷர்மா நேபாள தேர்தல் முறையில் பல புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவந்தவர் என்று பாராட்டப்படுபவர். சில தனிப்பட்ட காரணங்களால் தாமதமாகிவரும் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறலாம் என்று நம்பப்படுகிறது.

More articles

Latest article